உள்ளூர் செய்திகள்

திருவட்டார்-கருங்கலில் பேரிடர் மீட்பு ஒத்திகை

Published On 2023-07-08 09:39 GMT   |   Update On 2023-07-08 09:39 GMT
  • ஒத்திகையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
  • குளத்தில் மூழ்கியவரை மீட்கும் விதம் மற்றும் ஆபத்து காலங்களில் செயல்படும் வழிமுறைகள்

கன்னியாகுமரி :

தென்மேற்கு பருவமழை பெய்து வருவதையொட்டி மழை காலங்களில் பேரிடர்களில் சிக்குபவர்களை மீட்கும் வகையில் குலசேகரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் குலசேகரம் அருகே திருநந்திக் கரைக்குளத்தில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்தியகுமார் உத்தரவின்பேரில் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சியை குலசேகரம் தீயணைப்பு நிலைய அலுவலர் மைக்கேல், நிலைய அலுவலர்கள் தனபாலன், செல்வமுருகேசன் (போக்குவரத்து) ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் மழை காலங்களில் தண்ணீரில் சிக்கி தத்தளிப்ப வர்களை எவ்வாறு மீட்பது மற்றும் அவர்களுக்கு உடனே முதலுதவி சிகிச்சை அளிப் பது தொடர்பான ஒத்திகை நடத்தப்பட்டது. இந்த ஒத்திகையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருங்கல் அருகே உள்ள கண்ணன்விளை குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் தலைமை தாங்கினார். திப்பிறமலை ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பலதா முன்னி லை வகித்தார். இதில் மழை நீரில் இழுத்து செல்பவர்களை காப்பாற்றும் வழிகள், குளத்தில் மூழ்கியவரை மீட்கும் விதம் மற்றும் பல்வேறு ஆபத்து காலங்களில் செயல்படும் வழிமுறைகள் பொதுமக்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை குளச்சல் நிலைய அலுவலர் குணசேகர் தலைமையில் தீயணைப்பு வீரர்களின் ஒத்திகை நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு பயனடைந்தனர்.

Tags:    

Similar News