உள்ளூர் செய்திகள்

நாஞ்சில் சம்பத்துக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை

Published On 2023-01-26 15:00 IST   |   Update On 2023-01-26 15:00:00 IST
  • அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நாஞ்சில் சம்பத்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்
  • மயக்க நிலையில் உள்ள நாஞ்சில் சம்பத்துக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் இன்று வரை சுயநினைவு திரும்பவில்லை

நாகர்கோவில் :

குமரி மாவட்டம் தக்கலை அருகே மணக்காவிளையைச் சேர்ந்தவர் நாஞ்சில் சம்பத் (வயது 68). பேச்சாளரும் இலக்கியவாதியுமான இவருக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து நேற்று மதியம் நாஞ்சில் சம்பத்தை அவரது உறவினர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நாஞ்சில் சம்பத்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மயக்க நிலையில் உள்ள நாஞ்சில் சம்பத்துக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் இன்று வரை சுயநினைவு திரும்பவில்லை.நாஞ்சில் சம்பத் அவரது மனைவி மற்றும் மகன் உடனிருந்து கவனித்து வருகிறார்கள். நாஞ்சில் சம்பத் உடல்நிலை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது மகனிடம் கேட்டறிந்தார்.

இந்த நிலையில் ஆஸ்பத்திரி சிகிச்சை பெற்று வரும் நாஞ்சில் சம்பத்தை நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

Tags:    

Similar News