உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை

Published On 2023-07-26 12:25 IST   |   Update On 2023-07-26 13:28:00 IST
  • 31-ந்தேதி தொடங்கி 12 நாட்கள் நடக்கிறது
  • காலை 10 மணிக்கு அம்மனுக்கு களப அபிஷேகம் நடக்கிறது.

கன்னியாகுமரி :

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெறுவது வழக்கம். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவி லில் ஆடி மாதத் தில் 12 நாட்கள் களப பூஜை நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான ஆடி களப பூஜை வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து 12 நாட்கள் விழா நடக்கிறது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை 12 நாட்கள் தொடர்ந்து காலை 10 மணிக்கு அம்மனுக்கு களப அபிஷேகம் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ரெத்தினவேல் பாண்டியன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவில் மேலாளருமான ஆனந்த்  மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்

Tags:    

Similar News