உள்ளூர் செய்திகள்

ரெயில்வே மேம்பால பணி நடைபெறும் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் படுகாயம்

Published On 2023-07-10 12:17 IST   |   Update On 2023-07-10 12:17:00 IST
  • அறிவிப்பு பலகையை கவனிக்காமல் சென்றதால் விபரீதம்
  • ஆழ்வார்கோவில் வழியாக செல்ல அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு திருப்பி விடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி :

மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் அஜீஸ் (வயது 28). இவர் நேற்று இரவு திங்கள் நகருக்கு வந்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டி ருந்தார்.

நெய்யூர்-பரம்பை ரெயில்வே மேம்பாலத்திற்காக நெய்யூர் தனியார் மருத்துவ மனையில் இருந்து வாக னங்கள் திருப்பி விடப் பட்டுள்ளது. அதேபோன்று வட்டம், அழகியமண்டபம் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் திங்கள்நகர் ரவுண்டானாவில் இருந்து இரணியல் சந்திப்பு, ஆழ்வார்கோவில் வழியாக செல்ல அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு திருப்பி விடப்பட்டுள்ளது.

இதை கவனிக்காத அஜீஸ் திங்கள்நகரில் இருந்து நெய்யூர் வழியாக வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். நெய்யூர் அருகே ரெயில்வே மேம்பாலம் முன்பு மெயின் ரோட்டில் குவித்து வைக் பப்பட்டு இருந்த மண்மேடு களையும் தாண்டி மேம்பாலம் அமைக்க தோண்டப்பட்ட குழிக்குள் மோட்டார் சைக்கி ளுடன் விழுந்து படுகாயம் அடைந்தார்.

படுகாயத்துடன் கிடந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Tags:    

Similar News