உள்ளூர் செய்திகள்

ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உயர் மருத்துவ சிகிச்சைக்காக பன்முக கட்டிடம் அமைத்து தரவேண்டும் - மத்திய மந்திரியிடம் விஜய்வசந்த் எம்.பி. நேரில் வலியுறுத்தல்

Published On 2023-02-02 07:12 GMT   |   Update On 2023-02-02 07:12 GMT
  • இதயம், நரம்பி யல், மூளை சம்பந்தமான 11 உயர்வகை மருத்துவ சிகிச்சை அளிக்க தேவை யான மருத்துவக் குழு உள்ளது.
  • ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உயர் மருத்துவ சிகிச்சைக்காக பிரத்தியேக பன்முக பிரிவு

நாகர்கோவில் :

கன்னியாகுமரி மாவட்டத் தில் சுமார் 18 லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்ற னர். இவர்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்ய ஒரு பெரிய நவீன மருத்துவமனையாக ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனை மட்டுமே உள்ளது.

இங்கு இதயம், நரம்பி யல், மூளை சம்பந்தமான 11 உயர்வகை மருத்துவ சிகிச்சை அளிக்க தேவை யான மருத்துவக் குழு உள்ளது. ஆனால் உள் நோயாளிகள் படுப்பதற்கு 80 படுக்கைகளைக் கொண்ட ஒரு ஆஸ்பெஸ்டாஸ் கூரை கொண்ட பழைய கட்டிடம் மட்டுமே உள்ளது.

ஆதலால் சிகிச்சை தேடி வரும் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் திருவ னந்தபுரம் மற்றும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக திருப்பி அனுப்பப்படுகின்றனர். ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உயர் மருத்துவ சிகிச்சைக்காக பிரத்தியேக பன்முக பிரிவு மற்றும் அதற்கான கட்டி டம் வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் கோரிக்கையை எழுப்பி இருந்தது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சூக் மண்டயாவை டெல்லியில் விஜய்வசந்த் எம்.பி. நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

பிரதம மந்திரி ஜன் விகாஸ் காரியக்ரமம் திட்டத்தின் கீழ் 140 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் கட்டுவதற்கு உதவி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Tags:    

Similar News