குளத்தில் மூழ்கி பலியான தொழிலாளியை படத்தில் காணலாம்
இரணியல் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி
- இரவு 8.20 மணி அளவில் தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டனர்.
- மேலகுருந்தன்கோடு என்ற இடத்தை சேர்ந்தவர்
கன்னியாகுமரி:
இரணியல் அருகே மேலகுருந்தன்கோடு என்ற இடத்தை சேர்ந்தவர் நாராயணன் என்ற தாணிவேல் (வயது 49). கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் நேற்று மதியம் சுமார் 3 மணி அளவில் அப்பகுதி யில் உள்ள பாறைகுளம் கரையில் இருந்துள்ளார். அப்போது தவறி குளத்தில் விழுந்து மூழ்கிய அவரை அப்பகுதி மக்கள் குளத்தில் இறங்கி தேடி உள்ளனர். தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்த திங்கள்நகர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அதிகாரி பிரதீப்குமார் தலைமையில் சம்ப இடம் வந்த தீயணைப்பு வீரர்கள் குளத்தில் இறங்கி தாணிவேலை தேடினர். இரவு நெருங்கியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் லைட்களை எரியவிட்டு தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இரணியல் இன்ஸ்பெக்டர் சுந்தர பாண்டியன், கக்கோட்டுத் தலை கிராம நிர்வாக அதிகாரி ராதா, இரணியல் தனிப்பிரிவு ஏட்டு சுஜின் உள்ளிட்டோர் அங்கிருந்தனர்.
தொடர்ந்து இரவு 8.20 மணி அளவில் தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டனர். குளத்தில் தொழி லாளி மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.