உள்ளூர் செய்திகள்

குளச்சலில் மாயமாகி ஊர் திரும்பிய துணிக்கடை பெண் ஊழியர் மீண்டும் மாயம்

Published On 2023-08-18 08:15 GMT   |   Update On 2023-08-18 08:15 GMT
  • முக்காடு பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார்.
  • ஒரு துணிக்கடையில் ஊழி யராக வேலை பார்த்து வந்தார்.

நாகர்கோவில் :  திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி. இவர் கடந்த சில வருடங்களாக குமரி மாவட்டம் குளச்சல் அருகே முக்காடு பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மதுபாலா (24). இவர்களுக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. மதுபாலா கடந்த 2 மாத மாக குளச்சலில் ஒரு துணிக்கடையில் ஊழி யராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 11-ந்தேதி இரவு துணிக்கடை யில் வேலை முடிந்து வீட்டிற்கு கிளம்பிய மதுபாலா வீட்டிற்கு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் மாடசாமி நெல்லை மாவட்டத்தில் உள்ள உறவினர்கள் வீடுகளில் சென்று தேடினார். ஆனால் மதுபாலா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து மாடசாமி குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மதுபாலாவை தேடி வந்தனர். இந்நிலை யில் மதுபாலா நேற்று முன்தினம் இரவு குளச்சல் போலீஸ் நிலையம் வந்தார். அப்போது அவர் பெள்ளாச்சியில் தோழியை பார்க்க சென்று வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். உடனே மதுபாலாவின் வீட்டினருக்கும், மாடசாமிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் போலீஸ் நிலை யம் வர ழைக்கப் பட்டனர். கணவரை பார்த்ததும் மதுபாலா மாடசாமியுடன் செல்ல மாட்டேன் என மறுப்பு தெரிவித்தார். கணவர் வேண்டாம் என்றால் முறைப்படி விவாகரத்து பெற வேண்டும் என மதுபாலாவுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர். பின்னர் மதுபாலாவை அவரது அம்மாவுடன் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இரவு அம்மாவுடன் படுத்து தூங்கிய மதுபாலா நேற்று முன்தினம் இரவு மீண்டும் மாயமானார்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News