உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் 70 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த பூனை

Published On 2023-09-03 06:40 GMT   |   Update On 2023-09-03 06:40 GMT
  • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கயிறு கட்டி மாட்டை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
  • கிணற்றில் பார்த்த போது பூனை தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண் டிருந்தது தெரியவந்தது

நாகர்கோவில் :

நாகர்கோவில் நேசமணி நகர் பெஞ்ச மின் தெரு ரேஷன் கடை பின்புறம் 70 அடி ஆழம் கொண்ட கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் இருந்து பூனையின் சத்தம் கேட்டது.

அந்த பகுதி மக்கள் கிணற்றில் பார்த்த போது பூனை தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண் டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கயிறு மூலமாக கிணற்றின் உள்ளே இறங்கி பூனையை மீட்க நட வடிக்கையை மேற்கொண்ட னர். சுமார் 1 மணி நேரத் திற்கு பிறகு பூனை பத்திரமாக மீட்கப்பட்டது.

இதேபோல் தேரேக் கால்புதூர், சண்முகா நகர் பகுதியில் உள்ள கால்வா யில் மாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மாடு சேற்றில் சிக்கியது. சேற்றில் சிக்கிய மாடு வெளியே வர முடியாமல் தவித்தது.

மாட்டை மீட்க பொதுமக்கள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் முடியவில்லை. இதை யடுத்து தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கயிறு கட்டி மாட்டை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட மாட்டை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News