உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

முன்னாள் காதலனை தாக்கிய மாணவி உள்பட 4 பேர் மீது வழக்கு

Published On 2022-11-13 15:26 IST   |   Update On 2022-11-13 15:26:00 IST
  • தான் கொடுத்த அனைத்து பரிசு பொருட்கள் திருப்பி தர வேண்டும் என பிரவின் ஜெஸ்லினிடம் கேட்டுள்ளார்.
  • தாக்குதல் வீடியோ இணையதளத்தில் வெளியாகி உள்ளது

கன்னியாகுமரி:

திருவட்டார் அருகே மாத்தார் பகுதியை சேர்ந்தவர் பிரவின் (வயது 23) வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு அணக்கரை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஜெஸ்லின் (19) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவருக்கும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்றனர்.இந்நிலையில் தான் கொடுத்த அனைத்து பரிசு பொருட்கள் திருப்பி தர வேண்டும் என ஜெஸ்லினிடம் கேட்டுள்ளார். இதனால் பிரவின் மீது கோபம் கொண்டு பரிசு பொருட்களை தருகிறேன் வேர்கிளம்பியில் வா என ஜெஸ்லின் அழைத்துள்ளார்.

இதை நம்பி பிரவின் வேர்கிளம்பி வந்துள் ளார். அங்கு மறைந்து நின்ற ஜெஸ்லின் மற்றும் அவரது ஆண் நண்பர்கள் சேர்ந்து சரமாரியாக தாக்கி யுள்ளனர். அவர் உயிருக்கு பயந்து சத்தம் போடவே பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வர ஜெஸ்லின் மற்றும் ஆண் நண்பர்கள் 2 மோட்டார் சைக்கிளில் ஓடி தப்பி விட்டனர்.படுகாயமடைந்த பிரவின் தக்கலை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் இது சம்பந்தமாக கொற்றி கோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரை பெற்று கொண்டு போலீசார் ஜெஸ்லின் (19), ஈத்தவிளை பகுதியை சேர்ந்த ஜோஸ் (30), அணக்கரை பகுதியை சேர்ந்த ஜெனித் (20) மற்றும் ஒருவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்நிலையில் பிரவினை தாக்கி கொல்ல முயன்ற வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News