உள்ளூர் செய்திகள்

அஞ்சுகிராமம் பகுதியில் பிரபல கொள்ளையர் 3 பேர் கைது

Published On 2022-08-20 15:34 IST   |   Update On 2022-08-20 15:34:00 IST
  • கண்காணிப்பு காமிரா காட்சிகள் மூலம் சிக்கினர்
  • போலீசார் தொடர்ந்து விசாரணை

நாகர்கோவில்:

அஞ்சுகிராமம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து இரண்டு கடைகளில் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக அஞ்சு கிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது.

தனிப்படை போலீசார் கொள்ளை நடந்த பகுதி யில் உள்ள சிசிடிவி காமிராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.அப்போது கொள்ளை யர்கள் குறித்த அடையாளங்கள் தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற் கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று இரவு கொள்ளை வழக்கு தொடர்பாக வினு,பேச்சிமுத்து, சந்தோஷ் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.42 ஆயிரம் பணம், 7 செல்போன்கள் மற்றும் விலை உயர்ந்த சாக்லேட்டுகள் உட்பட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட வினு மீது 7 வழக்குகள் உள்ளது. இவர் நாகர்கோவில் மாநகராட்சியில் குப்பை வண்டி ஓட்டி வருகிறார். பேச்சிமுத்து மீதும் களக்காடு பகுதியில் வழக்குகள் உள்ளது. இவர் சுசீந்திரம் அழகப்பபுரம் பேரூராட்சி பகுதிகளில் குப்பை வண்டி ஓட்டி வருகிறார்.சந்தோஷ் அப்டா மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகிறார்.கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

வேறு ஏதாவது கொள்ளை வழக்கில் இவர்களுக்கு தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு பூதப் பாண்டி, குழித்துறை பகுதி யில் 2 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 பேர் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

Tags:    

Similar News