ஆணையர் ஆனந்த்மோகன் ஆய்வு செய்த காட்சி.
வடிவீஸ்வரம் பகுதியில் குடிநீர் சீராக வழங்க உடனடி நடவடிக்கை
- ஆணையர் ஆனந்த்மோகன் ஆய்வு
- பொதுமக்கள் 2 வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக தெரிவித்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் நகர மக்களுக்கு முக்கடல் அணையில் இருந்து பைப் லைன் மூலமாக குடிநீர் கொண்டு வரப்பட்டு கிருஷ்ணன் கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்பொழுது ஒரு சில பகுதிகளில் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்ப டுவதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி வந்தனர். வடிவீஸ்வரம் பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்டத்தில் கூறினார்கள்.தொடர்ந்து பொதுமக்களும் அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர்.
இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன் வடிவீஸ்வரம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று எத்த னை நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்பது குறித்து விவரங்களை கேட்டு அறிந்தார்.
அப்போது பொதுமக்கள் 2 வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவ தாக தெரிவித்தனர். உடனடியாக பொதுமக்க ளுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய ஆனந்த்மோகன் உத்தர விட்டார்.
இதை தொடர்ந்து பொதுமக்களுக்கு உடனடியாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.