உள்ளூர் செய்திகள்

விஜய்வசந்த் எம்.பி.

கடலில் மாயமாகும் மீனவர்களை மீட்க குமரியில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும்

Published On 2022-12-16 13:32 IST   |   Update On 2022-12-16 13:32:00 IST
  • பாராளுமன்றத்தில் விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் 72 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையில் உள்ள 42 மீனவ கிராமங்களில் ஏறத்தாழ 4 லட்சம் மீனவ மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

நாகர்கோவில்:

பாராளுமன்ற கூட்டத்தில் கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய்வசந்த் பேசும் போது கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் மீனவர்கள் மற்றும் மீனவர் கிராமங்களை மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். புயல் மற்றும் இயற்கை சீற்றங்களின் போது கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை பாதுகாக்க புதிய தொழில்நுட்ப கருவிகள் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 42 மீனவ கிராமங்களில் ஏறத்தாழ 4 லட்சம் மீனவ மக்கள் வாழ்ந்து வருவதை சுட்டிக்காட்டிய எம்.பி. விஜய் வசந்த் 72 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையில் கடல் அரிப்பினால் மீனவ கிராமங்கள் பாதிக்கப்படு வதை தடுக்க நிரந்தரமாக கடல் சுவர் எழுப்ப வேண் டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

மேலும் கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை பத்திரமாக மீட்டு வருவ தற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹெலிகாப் டர் இறங்குதளம் மற்றும் அதிவேக படகுகள் ஆகியவற்றை கொண்ட கடலோர பாதுகாப்பு காவல் நிலையத்தை அமைத்து குமரி மாவட்ட மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News