உள்ளூர் செய்திகள்

சரக்கு ரெயிலில் வந்த உரங்கள் லாரிகளில் ஏற்றப்படுவதை காணலாம்.

குமரி மாவட்டத்திற்கு விவசாய பணிகளுக்காக 635 டன் உரம் ரெயிலில் வந்தது

Published On 2022-11-26 09:37 GMT   |   Update On 2022-11-26 09:37 GMT
  • குமரி மாவட்டத்தில் கன்னி பூ, கும்பப் பூ, என இரு போக சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது.
  • தற்பொழுது கும்ப பூ சாகு படி பணியில் விவசாயி கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கன்னி பூ, கும்பப் பூ, என இரு போக சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது கும்ப பூ சாகு படி பணியில் விவசாயி கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

மாவட்டம் முழுவதும் 6500 ஹெக்டேரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு சாகுபடி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் விவசா யத்திற்கு தேவையான உரம் தட்டுப்பாடு நீடித்து வந்தது.

இதனை கவனத்தில் கொண்டு தங்கு தடை இன்றி விவசாயத்திற்கு உரம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் கொச்சி யில் இருந்து சரக்கு ரெயில் மூலம் கன்னியா குமரி மாவட்ட விவசாய பணிகளுக்காக 635 டன் பாக்டம்பாஸ் உரம் இன்று நாகர்கோவில் ரெயில் நிலையம் வந்தது. அந்த உரம் லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு நாகர்கோவில் ஒழுகின சேரியில் உள்ள மத்திய உர நிறுவன கிட்டங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட விவசாயத்திற்கு இந்த உரம் பயன்படுத்தப்பட இருக்கிறது. தனியார் ஏஜென்சிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு இந்த உரம் இங்கிருந்து விநியோகம் செய்யப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News