உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் பேசிய காட்சி.

74-வது குடியரசு தினவிழா பணிகளில் அனைத்து துறை அலுவலர்களும்ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்

Published On 2023-01-11 07:33 GMT   |   Update On 2023-01-11 07:33 GMT
  • கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள்
  • குடியரசு தினவிழா நிகழ்ச்சி அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வருகிற 26-ந்தேதி அன்று நடைபெறவுள்ளது

நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், கலெக்டர் அரவிந்த் தலைமையில், 74-வது குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் பேசியதாவது:-

கன்னியாகுமரி மாவட் டத்தில் குடியரசு தினவிழா நிகழ்ச்சி கடந்த ஆண்டை போல் இவ்வாண்டும் நாகர்கோவில், அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வருகிற 26-ந்தேதி அன்று நடைபெற வுள்ளது. இவ்விழாவிற்கு வருகை தரும் முக்கிய விருந்தினர்களுக்கு போதிய அளவு இருக்கைகள் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

நாகர்கோவில் மாநக ராட்சி மூலம் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட வேண்டும். விழாவில் விபத்துக்கள் ஏற்படாத வகையில், தீய ணைப்புத்துறை மூலம் தீயணைப்புக்கருவிகளை தயார்நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். சுகாதாரத் துறையினர் சிகிச்சை உபகரணங்கள் மற்றும் ஆபத்துக்கால வாகனங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

வருவாய்த்துறை, சுகா தாரத்துறை, காவல்துறை, உள்ளிட்ட பல்வேறு துறை களில் சிறப்பாக பணி யாற்றிய அலுவலர்கள், பணி யாளர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

குடியரசு தினவிழா விற்கான அனைத்து முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் அனைத்து அலுவ லர்களையும் கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு அலுவலர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும். மேலும், இவ்விழா சிறப்பாக நடைபெற அனைத்துத்துறைகளை சார்ந்த அலுவலர்களும் ஒருங்கிணைந்து தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாகர்கோவில் மாநக ராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், மாவட்ட வன அலுவலர் இளையராஜா, பத்மநாபபுரம் உதவி கலெக்டர் கவுசிக், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் உள்பட அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News