உள்ளூர் செய்திகள்

கன்னிவாடியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2025-09-08 17:15 IST   |   Update On 2025-09-08 17:15:00 IST
  • மூலனூர், கன்னிவாடி துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
  • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்பட உள்ளது.

தாராபுரம்:

மூலனூர், கன்னிவாடி துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. 

இதனால் அக்கரைப்பாளையம், பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, போளரை, நொச்சிக்காட்டுவலசு, வெங்கிகல்பட்டி, கருப்பன்வலசு, வடுகபட்டி, லக்கமநாயக்கன்பட்டி, பெரமியம், வெள்ளவாவிபுதூர், கிளாங்குண்டல், கன்னிவாடி, மாலமேடு, அரிக்காரன்வலசு, ஆய்க்கவுண்டன்பாளையம்,

நஞ்சைத்தலையூர், புஞ்சைத்தலையூர், மணலூர், பெருமாள்வலசு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்பட உள்ளது. இந்த தகவலை, மின்வாரிய செயற்பொறியாளர் கேசவராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News