உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம், திருவள்ளூர், மீஞ்சூர் புதுநகர திட்டம்- வருவாய் கிராமங்கள் இணைப்புக்கு கருத்து கேட்பு

Published On 2023-02-09 15:33 IST   |   Update On 2023-02-09 15:33:00 IST
  • திருவள்ளூர் புதுநகரத் திட்டத்தின் கீழ் 11 வருவாய் கிராமங்கள் இணைக்கப்படுகின்றன.
  • மீஞ்சூர் புதுநகரத் திட்டத்தின் கீழ், வாலூர், அத்திப்பட்டு, எண்ணூர், நந்தயம்பாக்கம், கொலாட்டி, அரியன்வாயல், மீஞ்சூர், கொளஞ்சி, காட்டுப்பள்ளி, வயலூர், நெய்தவாயல், புழுதிவாக்கம் ஆகிய கிராமங்கள் இணைக்கப்படுகின்றன.

காஞ்சிபுரம்:

வீட்டு வசதி துறை செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் புதுநகரத் திட்டத்தின் கீழ் 11 வருவாய் கிராமங்கள் இணைக்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் முக்கிய போக்குவரத்து வழித்தடங்கள், திருப்பதி சாலை ஆகியவை வருகின்றன. மொத்தம் 37.74 சதுர கி.மீ. சுற்றளவு கொண்ட பகுதிகள் இதில் அடங்குகின்றன.

இதையடுத்து, திருவள்ளூர் புதுநகர திட்டத்தில் பாலேஸ்வரம், அத்துப்பாக்கம், அரியபாக்கம், எல்லாபுரம், ரல்லபாடி, பெரியபாளையம், சித்தாரியம்பாக்கம், மூக்கில்பட்டு, வடமதுரை, பணப்பாக்கம், வேலப்பாக்கம் ஆகியவை இணைக்கப்படுகின்றன.

அதேபோல காஞ்சிபுரம் புதுநகர திட்டத்தின் கீழ், ஏனாத்தூர், நல்லூர், பாப்பன்குழி, வையாவூர், கலையனூர், புத்தேரி, மேலாம்பி, கீழாம்பி, சித்தேரிமேடு, கோனேரிக்குப்பம், திருமால்படி தாங்கல், கீழ்கதிர்பூர், திம்ம சமுத்திரம், கருப்படி தட்டடை, அச்சுக்காடு, நெட்டேரி, அரப்பஞ்சேரி, சிறுகாவேரிபாக்கம் ஆகிய கிராமங்கள் இணைக்கப்படுகின்றன.

இந்த இணைப்பு தொடர்பான கருத்துக்களையும், ஆட்சேபனைகளையும் 2 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கலாம்.

மேலும் மீஞ்சூர் புதுநகரத் திட்டத்தின் கீழ், வாலூர், அத்திப்பட்டு, எண்ணூர், நந்தயம்பாக்கம், கொலாட்டி, அரியன்வாயல், மீஞ்சூர், கொளஞ்சி, காட்டுப்பள்ளி, வயலூர், நெய்தவாயல், புழுதிவாக்கம் ஆகிய கிராமங்கள் இணைக்கப்படுகின்றன. இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், உள்ளூர் அமைப்புகள், தங்களது ஆட்சேபனைகள், கருத்துக்களை 2 மாதங்களுக்குள் "அரசு செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, தலைமை செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009" என்ற முகவரியில் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News