உள்ளூர் செய்திகள்

கடையனோடை பாலத்தை படத்தில் காணலாம்.

நாசரேத் அருகே கடையனோடை பாலத்தை சீரமைக்க வேண்டும்- பொது மக்கள் கோரிக்கை

Published On 2022-12-04 09:15 GMT   |   Update On 2022-12-04 09:15 GMT
  • ஏரலில் இருந்து நாசரேத் நகருக்கு வருவதற்கு புன்னைநகா் மற்றும் கடையனோடை பாதையை போக்குவரத் திற்கு வாகன ஓட்டிகள் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனா்.
  • தற்சமயம் கடையனோடை பாலம் பழுதடைந்து காணப்படுகிறது.

நாசரேத்:

தூத்துக்குடி, ஏரலில் இருந்து நாசரேத் நகருக்கு வருவதற்கு புன்னைநகா் மற்றும் கடையனோடை பாதையை போக்குவரத் திற்கு வாகன ஓட்டிகள் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனா். கடையனோடை பாதையில் கடம்பா குளத்திற்கு செல்லும் கால்வாய் தண்ணீர் குறுக்காக செல்ல கட்டப்பட்ட பழமை யான பாலம், அத்துடன் குளத்திற்கு தண்ணீர் செல்வதற்கான மதகுகளும் உள்ளது.

தற்சமயம் பாலம் பழுதடைந்து உள்ளது. மேலும் ஒரே நேரத்தில் 2 சிறிய இலகு ரக வாகனங்கள் கூட கடந்து செல்ல முடியாத அளவிற்கு மிக குறுகலாக உள்ளது. இந்த பாலத்தை வாகனங்கள் எளிதாக கடக்கும் வகையில் அகலப்படுத்தி புதுப்பித்து கட்டினால் வாகன போக்குவரத்துக்கு எளிதாக இருக்கும். இதனை சீரமைத்து புதிய சாலை அமைத்தால் நாசரேத் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள தொழிற் பேட்டையில் இருந்து தூத்துக்குடி, ஏரல் செல்ல எளிதாக இருக்கும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News