சர்வதேச குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி
- மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்.
- 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள், பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
தமிழக அரசின் சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலகின் சார்பில் தேசிய குழந்தைகள் தினம், உலக குழந்தைகளுக்கு எதிரான துன்புறுத்தல்கள் தடுப்பு தினம் மற்றும் சர்வ தேச குழந்தைகள் தினம் ஆகியவை முறையே நவம்பர் 14, 19, 20-ந் தேதிகளில் கடைபிடிக்கப்ப டுகிறது.
இதையொட்டி குழந்தைக ளுக்கான விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் தொடங் கிய இந்த பேரணியை மாவட்ட வருவாய் அலுவ லர் சாதனைக்குறள் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பேரணி பெங்க ளூரு சாலை வழியாக சென்று அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. இதில் குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் குறித்து கோஷங் கள் எழுப்பப்பட்டன. இதில் பல்வேறறு தனியார் கல்லூ ரிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள், அலுவலர்கள் பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக குழந்தைக ளின் பொறுப்புகள், பாது காப்பு, உரிமைகள், சட்டங் கள் குறித்து எடுத்து கூறப் பட்டது. இதில் மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலகு அலுவலர்கள் சுபாஷ், கஸ்தூரி மற்றும் பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.