உள்ளூர் செய்திகள்

சீர்காழிக்கு வருகை புரிந்த ரெயில் பயணிகள் நல குழு உறுப்பினர்கள்.

ரெயில் நிலையத்தில் பயணிகள் நல குழு உறுப்பினர்கள் ஆய்வு

Published On 2022-09-17 09:56 GMT   |   Update On 2022-09-17 09:56 GMT
  • அந்தியோதியா ரெயிலை சீர்காழியில் நின்று செல்ல ேகாரிக்கை விடுக்கப்பட்டது.
  • சுகாதாரமான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்றவை ஏற்படுத்தி தர வேண்டும்.

சீர்காழி:

சீர்காழி ரெயில் நிலையத்திற்கு பயணிகள் நல குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது சீர்காழி ரயில் நிலையத்தில் குடிநீர் வசதி, கழிவறை வசதி, பயணிகள் காத்திருக்கும் அறை ஆகியவற்றை பார்வையிட்டனர்.

ஆய்வு குழுவிடம் சீர்காழியில் ஒரு வழியில் தற்போது நின்று செல்லும் அனைத்து ரெயில்களும் இரண்டு வழித்தடத்திலும் நின்று செல்லவும், அந்தியோதையா ரயிலை சீர்காழியில் நின்று செல்லவும், பெட்டிகள் அடையாளம் காண வழிவகை செய்யவும், நிரந்தரமாக இரண்டாம் நடைமேடையில் மின் விசிறிகள் மற்றும் மின் விளக்குகள் அமைக்கவும், சுகாதாரமான குடிநீர் வசதி கழிப்பிட வசதி போன்றவை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் வலியுறுத்தி கோரிக்கை விடுக்கப்பட்டது.

முதல் நடைமேடையில் புதிய நிழல் குடை அமைக்கவும் பயணிகள் நல குழு உறுப்பினர்களிடம் விழுதுகள் இயக்கம் சார்பில் அதன் தலைவர் ஷரவணன் வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார்.

இதேபோல் ரயில்வே துறை சேர்மேனிடம், சீர்காழி வர்த்தகர்கள் பாதுகாப்பு நல சங்கம் சார்பில் சீர்காழியில் நின்று செல்லாத ரயில்கள் குறித்து சங்கத்தின் சார்பில் சங்கத்தின் தலைவர் ஞானமணி, செயலாளர் வெங்கட்ராஜ், பொருளாளர் சத்யநாராயணன், எக்ஸ்ரே ராஜா, சேதுராமன் ஆகியோர் கோரிக்கை மனு அரித்தனர். அப்போது பா.ஜ.க. மாவட்ட தலைவர் அகோரம், பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராம.சிவ சங்கர், நகரத் தலைவர் சங்கர், பொறுப்பாளர் வெற்றிலை முருகன், சீர்காழி நகர வர்த்தக சங்கத்தை சேர்ந்த தில்லை நடராஜன் உள்ளிட்ட பலர்உடன் இருந்தனர்.

Tags:    

Similar News