உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த சுதந்திர தினவிழாவில் காவல்துறை அணிவகுப்பை கலெக்டர் சரயு ஏற்றுக்கொண்டபோது எடுத்த படம். அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாக்கூர் உள்ளார்

கிருஷ்ணகிரியில் சுதந்திர தினவிழா கோலாகல கொண்டாட்டம்

Published On 2023-08-15 15:03 IST   |   Update On 2023-08-15 15:03:00 IST
  • விழாவிற்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
  • சிறப்பாக பணியாற்றிய மைக்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 305 பேருக்கு சான்றிதழும் வழங்கினார்.

கிருஷ்ணகிரி, 

இந்திய நாட்டின் 77-வது சுதந்திர தின விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் சுதந்திர தினவிழா நடை பெற்றது.

இந்த விழாவிற்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் காவல்துறை அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் 23 பயனாளிகளுக்கு ரூ.13 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கலெக்டர் சரயு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் சிறப்பாக பணியாற்றிய மைக்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 305 பேருக்கு சான்றிதழும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாக்கூர், வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். செல்லக்குமார், திட்ட இயக்குனர் வந்தனா கார்க், வருவாய் கோட்டாட்சியர் பாபு உட்பட அரசு அலுவலர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Tags:    

Similar News