உள்ளூர் செய்திகள்

வீடுகளில் திருடியதாக கைதான கொள்ளையனையும், மடக்கி பிடித்த போலீசாரையும் படத்தில் காணலாம்.

திண்டிவனம் பகுதியில் பூட்டிய வீடுகளில் திருடிய பிரபல கொள்ளையன் கைது

Published On 2022-07-30 12:32 IST   |   Update On 2022-07-30 12:32:00 IST
  • திண்டிவனம் பகுதியில் பூட்டிய வீடுகளில் திருடிய பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
  • டீக்கடை ஒன்றில் சந்தேகப்படும்படியான நபர் நீண்ட நேரமாக நின்றார்.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மரக்காணம் சாலை, மன்னார் சாமி கோவில் அருகே பிரம்மதேச போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிபாபு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த டீக்கடை ஒன்றில் சந்தேகப்படும்படியான நபர் நீண்ட நேரமாக நின்றார். அவர் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதனையடுத்து அந்த நபரை பிரம்மதேசம் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் சென்னை அசோக் நகரை சேர்ந்த வெங்கடேசன் என்கின்ற கலச வெங்கடேசன்(36), என்பதும் இவர் திண்டிவனம் உட்கோட்ட பகுதிகளில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு வீட்டின் பூட்டை உடைத்து பல ஆண்டுகளாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. மேலும் 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் மரக்காணம் சாலை அண்ணா நகர், மயிலம், கூட்டேரிப்பட்டு, வெள்ளிமேடு பேட்டை, ரோஷனை உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவரிடம் இருந்து 25 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News