உள்ளூர் செய்திகள்

காங்கயத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Published On 2023-02-04 11:06 IST   |   Update On 2023-02-04 11:06:00 IST
  • போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்பட்டு தொடர்ந்து வாகன விபத்துகள் நடந்து வருகிறது.
  • காங்கயம் நகராட்சி சார்பில் பலமுறை சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி வந்தனர்.

காங்கயம் :

கோவை-கரூர், ஈரோடு-பழனி, பெருந்துறை உள்ளிட்ட சாலைப் பகுதிகளை இணைக்கும் நகரமாக உள்ள காங்கயம் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்பட்டு தொடர்ந்து வாகன விபத்துகள் நடந்து வருகிறது.சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு காய்கறி மற்றும் பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், மேலும் கடைகளுக்கு முன் கூடுதலாக மேற்கூரை அமைக்கப்பட்டும், விற்பனைப்பொருட்களை சாலையில் வைத்தும் உள்ளனர்.இதனால் காங்கயம் நகரில் வாகன விபத்து அடிக்கடி நடைபெற்று வருகிறது.

காங்கயம் நகராட்சி சார்பில் பலமுறை சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி வந்தனர். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் யாரும் தங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என கடந்த சில நாட்களாக நகராட்சி நிர்வாகம் சார்பில், வாகனங்கள் மூலம் ஒலிபெருக்கியில் அறிவிப்பு வெளியிடப்பட்டு வந்தது.

இதையடுத்து நகர்மன்றத் தலைவர் சூரியபிரகாஷ் தலைமையில், நகராட்சிப் பணியாளர்கள் 25 பேர் சாலையோர ஆக்கிரமிப்பு–களை அகற்றினர்.

Tags:    

Similar News