உள்ளூர் செய்திகள்

கண்காட்சியை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் திறந்து வைத்து அரங்கில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை பார்வையிட்டார்.

தஞ்சையில், நெகிழி மாற்று பொருட்கள் கண்காட்சி- கலெக்டர் திறந்து வைத்தார்

Published On 2023-03-19 14:48 IST   |   Update On 2023-03-19 14:48:00 IST
  • தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் நெகிழிக்கு மாற்றான பொருட்கள் கண்காட்சியை திறந்து வைத்தார்.
  • பெண்களுக்கான அழகு பொருட்கள் விற்பனை அரங்குகள் இடம் பெற்றுள்ளன.

தஞ்சாவூர்:

நெகிழி இல்லா தஞ்சை மாவட்டம் என்ற திட்டத்தின்படி மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக இன்று தஞ்சை பெரியக் கோவில் வளாகத்தில் நெகிழிக்கு மாற்றான பொருட்கள் கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் கண்காட்சியில் வைக்கபட்டு இருந்த பொருட்களை பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்த கண்காட்சியில் சணலால் தயாரிக்கப்பட்ட பை, பாக்கு மட்டையில் தயாரிக்கப்பட்ட சாப்பாடு மற்றும் டிபன் தட்டு, கால்நடைகளின் தீவனமான தவிடு கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட டீ கப் மற்றும் ஸ்பூன், வண்ண காகிதங்களால் ஆன சுவர் அலங்காரப் பொருட்கள்.

பனை ஓலை கொண்டு செய்யப்பட்ட கம்மல், நெக்லஸ், கீ செயின், ஆரம் உள்ளிட்ட பெண்களுக்கான அழகுப் பொருட்கள் விற்பனை அரங்குகள் இடம் பெற்றுள்ளன.

நெகிழியை விட இந்த பொருட்கள் விலை கூடுதலாக இருந்தாலும் நெகிழி பயன்படுத்தி வரும் நோய்க்கு செலவு செய்யும் தொகையை விட குறைவுதான்.

அனைவரும் நெகிழி இல்லா மாவட்டமாக தஞ்சாவூர் விளங்க எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News