உள்ளூர் செய்திகள்

கடைகள் அடைக்கப்பட்டு காணப்படும் சீர்காழி பழைய பஸ் நிலையம்.

சீர்காழியில், இன்று கடை அடைப்பு போராட்டம்

Published On 2022-11-28 08:14 GMT   |   Update On 2022-11-28 08:14 GMT
  • கொரோனா ஊரடங்கால் கடைகள் வியாபாரம் இன்றி பூட்டப்பட்டிருந்தது.
  • கால அவகாசம் கேட்டபோது அவகாசம் இன்றி கடைகளுக்கு சீல் வைத்தனர்.

சீர்காழி:

சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான 96 கடைகள் உள்ளது.

இதில் கடந்த சில வாரத்துக்கு முன்பு 12 கடைகளுக்கு வாடகை நிலுவை இருப்பதாக நகராட்சி நிர்வாகத்தினர் கடைகளுக்கு சீல் வைத்தனர்.

இந்நிலையில் சீர்காழி பழைய பஸ் நிலைய நகராட்சி வர்த்தக சங்கத்தின் சார்பில் கால அவகாசம் இல்லாமல் கடைகளுக்கு சீல் வைத்ததை கண்டித்தும், அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சீர்காழி பழைய பஸ் நிலையம், காமராஜர் வீதி ஆகிய பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான 96 கடைகளை வர்த்தகர்கள் பூட்டி கடையடைப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

இது குறித்து பழைய பஸ் நிலைய வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், கொரோனோ காலக ட்டத்தில் இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு உத்தரவால் கடைகள் வியாபாரம் இன்றி பூட்டப்பட்டிருந்தது.

இதனால் கடைகளுக்கு வாடகை செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.

இது குறித்துநகராட்சி நிர்வாகத்திடம் கால அவகாசம் கேட்டபோது இரண்டு ஆண்டுகளுக்கு இரண்டு மாதத்திற்கு மட்டு மே வாடகை விலக்கு அளித்தனர்.

மீதமுள்ள வாடகை தொகையை மொத்தமாக கால அவகசம் இன்றி கட்ட கூறியதால் தங்களால் கட்ட இயலவில்லை.அதற்கு கால அவகாசம் கேட்டபோது அவகாசம் இன்றி கடைகளுக்கு சீல் வைத்தனர் என வருத்தத்துடன் தெரிவித்தனர்.

Tags:    

Similar News