ராயக்கோட்டையில் 634 விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி
- விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
- தலைமையாசிரியர்கள் சீனிவாசன், ஜெயந்திசம்பத் ஆகியோர் தலைமை வகித்தனர்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. பள்ளி தலைமையாசிரியர்கள் சீனிவாசன், ஜெயந்திசம்பத் ஆகியோர் தலைமை வகித்தனர். உதவி தலைமையாசிரியர் மோகன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக வேப்பனஹள்ளி முன்னாள் எம்.எல்.ஏ., பி.முருகன், கலந்துக்கொண்டு பிளஸ் 2 படிக்கும், 634 மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி அரசு திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.
நிகழ்ச்சியில் தி.மு.க., ஒன்றிய செயலாளர் சின்னராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் நாகராஜ், கோபால், தொழில் அதிபர் ஆர். எம்.முனிரத்தினம், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் அரியப்பன், கணேசன், அவைத்தலைவர் ஜெயராமன், பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர்கள் குஜ்ஜப்பன், கிருஷ்ணன், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் கஞ்சப்பன், பெரியசாமி, பி.டி.எ. நிர்வாதிகள், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் சந்திரன் நன்றி கூறினார்.