உள்ளூர் செய்திகள்

அரசின் நலத்திட்டங்கள் வழங்குவதில் லஞ்சம் கேட்கும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை: வசந்தம்கார்த்திக்கேயன் எம்.எல்.ஏ. எச்சரிக்கை

Published On 2022-07-15 08:55 GMT   |   Update On 2022-07-15 08:55 GMT
  • அரசின் நலத்திட்டங்கள் வழங்குவதில் லஞ்சம் கேட்கும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வசந்தம்கார்த்திக்கேயன் எம்.எல்.ஏ. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  • இந்த விஷயத்தில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கண்காணிப்பில், மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மேற்பார்வையில் இலவச நலத்திட்டங்களை வழங்குவதற்கு தகுதி அடிப்படையில் பயனாளிகளை தேர்வு செய்து 100 சதவீதம் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறது. இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசின் இலவச வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகளிடம் இடைத்தரகர்கள் லஞ்சம் கேட்பதாக புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறது. ஆளும் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் இந்த செயலை இத்தோடு நிறுத்திக் கொள்வது நல்லது. இந்த விஷயத்தில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என முதல்-அமைச்சர் கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கிறார். எனவே இதுபோன்ற தவறுகள் இனியும் தொடர்ந்து நடைபெற்றால் பாதிக்கப்படும் பயனாளிகள் மூலம் போலீஸ் நிலையத்தில் புகார் தரப்பட்டு சம்பந்தப்பட்ட இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.

Tags:    

Similar News