உள்ளூர் செய்திகள்

குண்டும்,குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ள சாலை.

பாலக்கோடு பேரூராட்சியில் குண்டும், குழியுமான சாலை - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

Published On 2022-08-05 09:47 GMT   |   Update On 2022-08-05 09:47 GMT
  • மாற்று வழி இல்லாமல் ஒரே சாலையை பயன்படுத்தி வருவதால் தொடர்ந்து சாலை பழுதடைந்து வருகிறது.
  • துரித நடவடிக்கை மேற்கொண்டு சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலக்கோடு,

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி சார்பில் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்க மத்திய ஜல்சக்தி திட்டத்தின் கீழ் 5.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 18 வார்டுகளிலும், 2 வருடங்களாக பணிகள் நடைபெற்று வருகிறது.

கடந்த ஓராண்டுக்கு முன்பு ஸ்தூபி மைதானம் முதல் கல்கூடஹள்ளி வரை உள்ள பெல்ரம்பட்டி செல்லும் நெடுஞ்சாலை குடிநீர் குழாய் அமைக்க தோண்டப்பட்டது.

அந்த சாலை சீரமைக்கப்படாததால் குண்டும், குழியுமாக மாறி, கற்கள் பெயர்ந்து, மண் துகள்கள் வாகன ஓட்டிகளின் கண்களில் விழுகிறது.

சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.மேலும் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மாற்று வழி இல்லாமல் ஒரே சாலையை பயன்படுத்தி வருவதால் தொடர்ந்து சாலை பழுதடைந்து வருகிறது.

பேரூராட்சி நிர்வாகத்தின் மெத்தனத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News