உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் அசோக்குமார் எம்.எல்.ஏ இனிப்பு வழங்கிய காட்சி.

கிருஷ்ணகிரியில் அசோக்குமார் எம்.எல்.ஏ தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Published On 2022-07-07 15:30 IST   |   Update On 2022-07-07 15:30:00 IST
  • ஜூலை 11-ந் தேதி நடக்க உள்ள அ.தி.மு.க., பொதுக்குழுவிற்கு தடையில்லை என அதிரடியாக தீர்ப்பை வழங்கியது.
  • இந்த தீர்ப்பு அ.தி.மு.க., தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றி.

கிருஷ்ணகிரி,

அ.தி.மு.க., பொதுக்குழுவிற்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால் அ.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

ஜூன் 23-ந் தேதி நடந்த பொதுக்குழுவில், தமிழ்மகன் உசேனை பேரவை தலைவராக தேர்ந்தெடுத்து அறிவித்தது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று (ஜூலை 7-ந் தேதி) விசாரணைக்கு வர இருந்த நிலையில்,

இதை எதிர்த்து பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள், ஜூலை 11-ந் தேதி நடக்க உள்ள அ.தி.மு.க., பொதுக்குழுவிற்கு தடையில்லை என அதிரடியாக தீர்ப்பை வழங்கியது.

மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கும் இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் உற்சாகம் அடைந்த அ.தி.மு.க.,வினர் நேற்று மதியம் கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான அசோக்குமார் தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த எம்.எல்.ஏ., இந்த தீர்ப்பு அ.தி.மு.க., தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றி. உச்சநீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், ஒன்றிய செயலாளர்கள் கண்ணியப்பன், சோக்காடிராஜன், முன்னாள் மாவட்டத் தலைவர் தென்னரசு, நகர செயலாளர் கேசவன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, தாபா வெங்கட்ராமன், கிளை செயலாளர் சின்னராஜ், இளைஞர் அணி நகர செயலளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News