உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் ஊருக்குள் பகலிலும் உலா வரும் கரடிகள்

Published On 2023-09-01 09:03 GMT   |   Update On 2023-09-01 09:03 GMT
  • சிசிடிவி காமிராவில் உணவு தேடி திரியும் காட்சிகள் பதிவாகி உள்ளது
  • கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

அரவேணு,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது கரடி, சிறுத்தை, காட்டுமாடு ,யானை, பன்றி, குரங்கு ,போன்ற வனவி லங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அவை உணவு மற்றும் தண்ணீரை தேடி அருகி லுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுத்து வருகின்றன.

இந்த நிலையில் ரோஸ் காட்டேஜ் பகுதிக்கு நேற்று இரவு ஒற்றை கரடி வந்தது. அங்கு அங்கு உள்ள பகுதியில் உணவு மற்றும் தண்ணீர் தேடி சுற்றி திரிந்தது. இந்த காட்சிகள் அங்கு உள்ள சிசிடிவி காமிராவில் பதிவாகி உள்ளது. கோத்தகிரி குடியிருப்புக்குள் கரடி நுழையும் பதிவு வெளியாகி இருப்பதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதற்கிடையே நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த உள்ள அணைஹட்டி கிராமத்தில் பகல் நேரத்தி லும் ஒரு கரடி குடியிருப்பு பகுதியில் உலா வரும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அணைஹட்டி கிரா மத்தில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது அங்கு வனவிலங்குகளின் தொல்லை கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வண்ணம் உள்ளது. இந்த நிலையில் அனைஹட்டி கிராமத்துக்கு ஒரு கரடி பட்டப்பகலில் வந்தது. இதுவும் அங்கு உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது.

அணைஹட்டி கிராமத்தில் கரடிகள் இரவு நேரத்தில் சுற்றி திரிவது வழக்கம். ஆனால் பட்டப்பகல் நேரத்திலும் கரடிகளின் நடமாட்டம் தென்படுவது, அங்கு வசிக்கும் பொது மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது. இதனால் அவர்கள் பகல் நேரத்திலும் குழந்தைகளை வெளியில் சென்று விளையாட அனுமதிப்பது இல்லை. மேலும் வெளியே சென்று வரும் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளும் அச்சத்துடன் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வனத்துறையினர் காடுகளின் பரப்பளவை அதிகப்படுத்தி விலங்குகளுக்கு தேவையான உணவுகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் தற்போது சுற்றி திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடவேண்டும் என கிராம மக்களும், சமூக ஆர்வலர்களும் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

Tags:    

Similar News