உள்ளூர் செய்திகள்
காவேரிப்பட்டணத்தில் வாடகை கட்டாத கடைகளுக்கு சீல்
- பேரூராட்சி அலுவலர்கள் பேருந்து நிலையத்தில் உள்ள வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைத்தனர்.
- வீடுகள் வரிபாக்கி செலுத்தாதவர்கள் உடனடியாக காவேரிப்பட்டணம் பேரூராட்சி அலுவலகத்தில் வரிபாக்கியை செலுத்த வேண்டும்
காவேரிப்பட்டணம்
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பேரூராட்சிக்கு சொந்தமாக பாலக்கோடு ரோடு சந்தை, மற்றும் பேருந்து நிலையத்தில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்நிலையில் பேரூராட்சிக்கு வரிபாக்கி செலுத்தாமல் நிலுவையில் உள்ளது.
இதனையடுத்து வரிபாக்கி வசூல் செய்யும் பணியை பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் இளங்கோ மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பேருந்து நிலையத்தில் உள்ள வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைத்தனர்.
மேலும் இது குறித்து பேரூராட்சி நிர்வாகம் கூறுகையில் காவேரிபட்டினம் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து கடைகளும் மற்றும் வீடுகள் வரிபாக்கி செலுத்தாதவர்கள் உடனடியாக காவேரிப்பட்டணம் பேரூராட்சி அலுவலகத்தில் வரிபாக்கியை செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.