உள்ளூர் செய்திகள்

காரிமங்கலம் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

Published On 2022-09-20 15:07 IST   |   Update On 2022-09-20 15:07:00 IST
  • காரிமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் 22-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.
  • காலை 9 மணி முதல் மதியம் 2 வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.

காரிமங்கலம்,

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் வனிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காரிமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் 22-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.

இதனால் காரிமங்கலம், அனுமந்தபுரம், திண்டல், எச்சணம்பட்டி, பெரியமிட்டஅள்ளி, அண்ணாமலை அள்ளி, பந்தாரஅள்ளி, தும்பலஅள்ளி, கெண்டிகானஅள்ளி, கே. மோட்டூர், பெரியாம்பட்டி, பைசுஅள்ளி, மாட்டலாம்பட்டி, பூமாண்டஅள்ளி, காளப்பனஅள்ளி, பண்ணந்தூர், கோவிலுர், நாகரசம்பட்டி, வேலம்பட்டி, நெடுங்கல், சப்பாணிப்பட்டி, இருமத்தூர், கம்பைநல்லூர், பூமிசமுத்திரம், வகுரப்பம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News