மாவட்ட அளவிலான தனித்திறன் திருவிழாவில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளி மாணவர்கள் சாதனை
- 6-ம் வகுப்பு மாணவி சித்ரா சிலம்ப போட்டியில் முதலிடம் பிடித்தார்.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், கேடயங்கள் வழங்கப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் முதன் முறையாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தனித்திறமை திருவிழா எம்.கே.வி.கே. பள்ளியில் நடைபெற்றது. இதில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளி 2-ம் வகுப்பு மாணவன் பாலசேஷன் மாறுவேடப் போட்டியிலும், 6-ம் வகுப்பு மாணவி சித்ரா 12 வயதுக்கு உட்பட்டோருக்கான சிலம்ப போட்டியில் முதலிடமும், மாணவி மிருதுளா ஜனனி ஓவியப் போட்டியிலும், 7-ம் வகுப்பு மாணவன் கோதண்ட ராமன் பேச்சு மற்றும் சிலம்பம் போட்டியிலும் பங்குபெற்று வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் பரிசாக வழங்கப்பட்டது. போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ் இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் பாராட்டினர்.