வேலைவாய்ப்பு முகாம் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தலைமையில் நடைபெற்றது.
ஓசூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்
- மாபெரும் வேலைவாய்ப்பு முகம் வருகிற 31-ந் தேதி ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் (அரசு ஐ,டி.ஐ பின்புறம்) நடைபெற உள்ளது.
- தனித்தனியே அரங்கம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட இயக்கு மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்ய யோஜனா திட்டத்தின் கீழ், மாபெரும் தனியார் துறைகளின் மூலம் வருகிற 31-ந் தேதி ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் துறையில் வேலை தேடும் இளைஞர்கள் பயனடையும் வகையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகம் வருகிற 31-ந் தேதி ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் (அரசு ஐ,டி.ஐ பின்புறம்) நடைபெற உள்ளது.
இதில் 5-ம் வகுப்பு முதல் பிளஸ்-2, டிகிரி, டிப்ளமோ, ஐ.டி.ஐ மற்றும் பட்டப்படிப்பு முடித்து வேலை தேடும் இளைஞர்கள் தங்களது சுயவிபர அறிக்கை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கல்விச்சான்று, ஆதார் கார்டு ஆகிய நகல்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும், ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு குறித்து பதிவு செய்தல், ஆதார் எண்ணை தேர்தல் அடையாள அட்டையுடன் இணைத்தல், பல்வேறு திட்டத்தின் கீழ் திறன் வளர்ச்சி பயிற்சிக்கு ஆள் சேர்ப்பு மற்றும் வங்கி கடன் பெற ஆலோசனை ஆகியவைகளுக்கும் தனித்தனியே அரங்கம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 8220380619 மற்றும் 9843091546 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டும் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் ஓசூர் மநகராட்சி ஆணையாளர் சினேகா, ஓசூர் சப் கலெக்டர் சரண்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் ஜாகீர்உசேன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் பன்னீர்செல்வம், ஓசூர் தாசில்தார் சுப்பிரமணி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.