உள்ளூர் செய்திகள்

தீயில் எரிந்து நாசமான வீட்டை படத்தில் காணலாம்

திருநாவலூர் அருகே மின்கசிவால் வீடு எரிந்து நாசம்

Published On 2022-10-25 12:59 IST   |   Update On 2022-10-25 12:59:00 IST
  • வீட்டில் அனைவரும் விவசாய விளைநிலங்களுக்கு சென்றுள்ளனர்.
  • வீடு முழுவதும் எரிந்து தீக்கிரையானது.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 50) விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் நேற்று தீபாவளியை வீட்டில் உள்ளவர்களுடன் சேர்ந்து கொண்டாடி விட்டு மாலை நேரத்தில் வீட்டில் இருந்து அனைவரும் அதே பகுதியில் உள்ள விவசாய விளைநிலங்களுக்கு சென்றுள்ளனர். 

அப்போது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு வீடு முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து இது குறித்து திருநாவலூர் தீயணைப்பு நிலை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்தது ரமேஷ் தலைமையிலான தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ அருகில் இருந்த வீட்டிற்கு பரவாமல் போராடி அணைத்தனர். ஆனால் இந்த விபத்தில் வீடு முழுவதும் எரிந்து தீக்கிரையானது. இதில் வீட்டில் உள்ள அனைத்து பொருள்களும் எலக்ட்ரானிக் பொருள்கள் துணிமணிகள் உள்ளிட்ட ஒரு லட்சம் மதிப்பிலான பொருள்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால் அனை வரும் உயிர் தப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீக்கரையான வீட்டை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தகவல் அறிந்த அதே பகுதியை சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் காமராஜ் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு வீட்டில் உரிமையாளர் ரங்கநாதனுக்கு பணம் மற்றும் உணவுப் பொரு ள்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் செய்தது குறிப்பி டத்தக்கது.

Tags:    

Similar News