உள்ளூர் செய்திகள்

3 தலைமுறையாக மின்சார வசதி இல்லாத மலை கிராம மக்கள்

Published On 2023-08-25 07:32 GMT   |   Update On 2023-08-25 07:32 GMT
  • தொரடி ப்பட்டு ஊராட்சியில் ஆத்து வளவு என்கிற ஆத்துக்காடு கிராமம் உள்ளது.
  • மின்சாரம் இல்லாத ஒரு கிராமமாக இந்த கிராமம் உள்ளது

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை ஒன்றி யத்திற்கு உட்பட்ட தொரடி ப்பட்டு ஊராட்சியில் ஆத்து வளவு என்கிற ஆத்துக்காடு கிராமம் உள்ளது. தொரடிப்பட்டு கிராமத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரம் ஒத்தையடிப் பாதை வழியாகச் சென்றால் ஆத்துக்காடு என்கிற ஆத்து வளவு கிராமத்திற்கு செல்லலாம். அங்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல தலைமுறையாக இந்த பகுதியில் வசித்து வந்தாலும் ,இதுவரை மின்சாரம் இல்லாமல் மின் துறையினரின் கண்ணில் படாத ஒரு கிராமமாக இந்த ஆத்துக்காடு கிராமம் உள்ளது. செல்போனுக்கு சார்ஜ் வேண்டுமென்றாலும் அருகில் உள்ள கிராம த்திற்குச் சென்று தான் செல்போன் சார்ஜ் செய்து வருகிறார்கள். உலகமே டிஜிட்டல் மயமாக இருந்து வரும் இந்த கால கட்டத்தில் கல்வரா யன்மலை ஆத்துக்காடு கிராமத்தில் மின்சாரம் இல்லாத ஒரு கிராமமாக இந்த கிராமம் உள்ளது என்பது வேடிக்கை யாகத்தான் உள்ளது. ஆகையால் இப்பகுதி மக்கள் அரசு அதிகாரிகளின் கண்ணில் படாத ஒரு தனி தீவு போல் வசித்து வருகிறார்கள். ஆகையால் இப்பகுதி மக்களுக்கு மின்சாரம் வசதி அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News