உள்ளூர் செய்திகள்
- போக்குவரத்து காவல்துறை சார்பில் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் போக்குவரத்து காவல்துறை சார்பில் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.உடுமலை டிஎஸ்பி., தேன்மொழிவேல் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணி உடுமலை நகரில் குட்டை திடலில் புறப்பட்டு தளி ரோடு, பழைய பஸ் நிலையம் ,மத்திய பஸ் நிலையம், ராஜேந்திரா ரோடு என முக்கிய வீதிகளில் சென்று காவல் நிலையத்தில் நிறைவடைந்தது.நிகழ்ச்சியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.