உள்ளூர் செய்திகள்

கரியகோவில், கெங்கவல்லியில் கன மழை ஏற்காட்டில் கடும் குளிர்

Published On 2022-07-27 06:05 GMT   |   Update On 2022-07-27 06:05 GMT
  • கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
  • ஏற்காட்டில் நேற்றிரவு தொடங்கிய மழை இன்று காலையிலும் சாரல் மழையாக பெய்து வருகிறது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் ப ல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

கன மழை

குறிப்பாக கரியகோவில், கெங்கவல்லியில் கன மழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது . இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சேலம் மாநகரில் நேற்றிரவு தொடங்கிய மழை அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, ஜங்சன், கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளிலும் பரவலாக பெய்தது . இன்று காலையும் மழை தூறிய படியே இருந்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

ஏற்காட்டில் குளிர்

ஏற்காட்டில் நேற்றிரவு தொடங்கிய மழை இன்று காலையிலும் சாரல் மழையாக பெய்து வருகிறது. மேலும் பனிப்பொழிவும் உள்ளதால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை மிக குறைவாகவே உள்ளது குறிப்பிட தக்கது.

290.4 மி.மீ. மழை

மாவட்டத்தில் அதிக பட்சமாக இன்று காலை 8 மணி வரை கரியகோவிலில் 41 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. கெங்கவல்லி 36, ஆனைமடுவு 31, வீரகனூர் 27, ஏற்காடு 26.4, காடையாம்பட்டி 26, பெத்தநாயக்கன் பாளையம் 25, ஆத்தூர் 24.2, தம்மம்பட்டி 23, ஓமலூர் 12, சேலம் 9, சங்ககிரி 5, எடப்பாடியில் 4.4. மி.மீ. மழை எ ன மாவட்டம் முழுவதும் 290.4 மி.மீ. மழை பெய்துள்ளது.

சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலையும் மழை தூறிய படியே இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்வோர் கடும் அவதி அடைந்தனர்.

Tags:    

Similar News