மலையாண்ட அள்ளி அரசு நடுலைப்பள்ளியில் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமையில் கிராம சபா கூட்டம் நடைபெற்ற காட்சி.
களர்பதி ஊராட்சியில் கிராம சபா கூட்டம்
- இளம் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துதல், வேளாண்மைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியங்களை கண்டறிந்து விவசாயிகள் பயன் பெறுதல் உள்ளிட்ட விழிப்புணர்வுடன் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
- கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தியிடம் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம், களர்பதி ஊராட்சி மலை யாண்டஅள்ளி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு களர்பதி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமையில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்களான தமிழக அரசு வழங்கும் இலவச வீடு, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களை கண்டறிந்து கணக்கெடுத்தல், தாய் தந்தை இருவரும் இறந்து ஆதரவற்ற நிலையில் உள்ள பள்ளி மாணவர்களை கண்டறிந்து அரசு வழங்கும் உதவி தொகை பெற வழிவகை செய்தல், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல் , இளம் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துதல், வேளாண்மைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியங்களை கண்டறிந்து விவசாயிகள் பயன் பெறுதல் உள்ளிட்ட விழிப்புணர்வுடன் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தியிடம் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.
இக் கூட்டத்தில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தமிழ் செல்வி கருணாநிதி, வேளாண்மை உதவி இயக்குனர் சிவநதி, தலைமை ஆசிரியர் வெங்கடேசன், மற்றும் வார்டு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக ஊராட்சி செயலர் சரவணன் நன்றி கூறினார்.