உள்ளூர் செய்திகள்
ராசிபுரம் அரசு கல்லூரி என்.சி.சி மாணவர்கள் ஏரி அருகே கிடந்த பிளாஸ்டிக் பொருட்களை அகற்றிய காட்சி.
அரசு கல்லூரி என்.சி.சி மாணவர்கள் தூய்மை பணி
- அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த தேசிய மாணவர் படையினர், புனித் சாகர் அபியான் திட்டத்தின் கீழ் ராசிபுரம் ஏரிக்கு அருகே கிடந்த பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.
- இப்பணிகள் கல்லூரி யின் என்.சி.சி அதிகாரி மேஜர் சிவகுமார் முன்னிலையில் நடைபெற்றது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த தேசிய மாணவர் படையினர், புனித் சாகர் அபியான் திட்டத்தின் கீழ் ராசிபுரம் ஏரிக்கு அருகே கிடந்த பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர். இப்பணிகள் கல்லூரியின் என்.சி.சி அதிகாரி மேஜர் சிவகுமார் முன்னிலையில் நடைபெற்றது. ராசிபுரம் நகராட்சித் தலைவர் கவிதா சங்கர், நகராட்சி துப்புரவு பணியாளர்களை அனுப்பி வைத்து நீர் நிலைகளில் உள்ள குப்பைகளை அகற்ற உதவி செய்தார். இந்த நிகழ்ச்சியில் ராசிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம், நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் முத்தமிழன் மற்றும் 40 தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பிளாஸ்டிக் பொருட்களை அகற்றினர்.