உள்ளூர் செய்திகள்

பாபநாசம் ெரயில் நிலையத்தில் தூய்மை பணி.

ெரயில் நிலையத்தில் அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை பணி

Published On 2023-08-22 09:51 GMT   |   Update On 2023-08-22 09:51 GMT
  • பாபநாசம் அரசு பள்ளி தேசிய மாணவர் படை உள்ளிட்டோர் இணைந்து தூய்மை பணிகள் மேற்கொண்டனர்.
  • பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலிகபிலன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

பாபநாசம்:

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ெரயில் நிலைய வளாகத்தில் பாபநாசம் ரயில் பயணிகள் சங்கம் மற்றும் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை உள்ளிட்டோர் இணைந்து தூய்மை பணிகள் மேற்கொண்டனர்.

தூய்மை பணியை ஒட்டி தேசிய மாணவர் படையினர் ரெயில் நிலைய நடைமேடை பகுதியில் தேங்கியிருந்த குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி, தூய்மை செய்தனர்.

மேலும் ெரயில் தண்டவாள பகுதிகளில் தேங்கியிருந்த குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை அள்ளியும், வளர்ந்திருந்த செடி, கொடிகளை வெட்டி அப்புறப்படுத்தியும் தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலிகபிலன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

தஞ்சை சரக ெரயில்வே வணிக ஆய்வாளர் ராம்குமார், ெரயில்வே முதுநிலை பொறியாளர் (பணிகள்) பிரேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த பணிகளை உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார், பட்டதாரி ஆசிரியர் சரவணன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலாளர் சரவணன் செய்திருந்தார்.

Tags:    

Similar News