உள்ளூர் செய்திகள்
மாநில அளவிலான வாலிபால் போட்டியில் 2-வது இடம் பிடித்த அரசு பள்ளி மாணவிகள்
- மாணவிகள் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர்.
- மேயர் சத்யா வாழ்த்து தெரிவித்தார்.
கடந்த 7 ந்தேதி முதல் 9-ந் தேதி வரை ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் மாநில அளவிலான மாணவ, மாணவிகளுக்காக வாலிபால் போட்டி நடைபெற்றது.
இதில் மாணவியருக்கான வாலிபால் போட்டியில் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. இதில் ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர்.
இதையடுத்து , சாதனை படைத்த பள்ளி மாணவி களை ஓசூர் மேயர் எஸ். ஏ. சத்யாவை நேரில் சந்தித்தனர். அப்போது அவர்களை பாராட்டிய மேயர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது, பயிற்சியாளர் மாணிக்கவாசகம் மற்றும் மாமன்ற உறுப்பினர் வெங்கடேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.