உள்ளூர் செய்திகள்
வடலூரில் அரசு பஸ் மோதி டிரைவர் பலி
- வடலூரில் அரசு பஸ் மோதி டிரைவர் பலியானார்.
- பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது,
கடலூர்:
வடலூர் காட்டுக்கொல்லை சர்வோதயநகர் பகுதியை சேர்ந்தவர் பகிரவன் (வயது 24)டிரைவர், இவர் மோட்டார் சைக்கிளிலில் விருத்தாச்சலத்தில் இருந்து வடலூர் நோக்கி வந்தார். ,வடலூர் தொழி ற்பேட்டை பொட்டுகடலை கம்பெனி அருகில் வரும்போது, கடலூரில் இருந்து விருத்தாச்சலம் சென்ற அரசு பஸ் மோதி பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலே இறந்துவிட்டார்.
இறந்த பகிரவன் உடல் பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது, இது குறித்து புகாரின்பேரில் வடலூர் போலிசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.