உள்ளூர் செய்திகள்

வீட்டின் முதல் மாடியில் இருந்து மரத்தில் தவறி விழுந்த சிறுமிக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

Published On 2023-03-07 09:24 GMT   |   Update On 2023-03-07 09:24 GMT
  • யாஷிகா தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார்.
  • காயம் அடைந்த சிறுமி யாஷிகாவுக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெரம்பூர்:

தண்டையார் பேட்டை, நேதாஜி நகர், 4-வது தெருவில் உள்ள வீட்டில் முதல் மாடியில் வசித்து வருபவர் ராஜசேகர். இவரது மகள் யாஷிகா. தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று இரவு சிறுமி யாஷிகா வீட்டின் பால்கனியில் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென தவறி கீழே விழுந்தார். அப்போது அருகில் இருந்த மரத்தின் கிளையில் விழுந்து அதில் தொங்கியபடி விழுந்தார். இதல் பலத்த காயம் அடைந்த சிறுமி யாஷிகாவுக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News