உள்ளூர் செய்திகள்

கஞ்சா, லாட்டரி விற்றவர்கள் சுற்றி வளைப்பு

Published On 2023-02-02 09:48 GMT   |   Update On 2023-02-02 09:48 GMT
  • லாட்டரி விற்றவர்களை போலீசார் அதிரடி சோதனை நடத்தி கைது செய்தனர்.
  • கைதானவர்களிடம் இருந்து பணம், போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள், லாட்டரி விற்றவர்களை போலீசார் அதிரடி சோதனை நடத்தி கைது செய்தனர்.

அந்த வகையில் பர்கூர் மல்லபாடி பகுதியில் காதர்பாஷா (52), கிருஷ்ணகிரி அவ்வை நகர் பகுதியை சேர்ந்த அஜய் (21), ஓசூர் காடிபாளையம் பகுதியை சேர்ந்த மகபூப் (59), ஓசூர் டவுன் பகுதியில் சென்னமூர்த்தி (40) ஆகியோர் கைதாகினர்.

இதேபோல சூளகிரி நல்லகானகொத்தப்பள்ளி பகுதியை சேர்ந்த மஞ்சுநாத் (26), அஞ்செட்டி நாட்றாபாளையம் பகுதியை சேர்ந்த ரகுநாதன் (45), சிவண்ணன் (43), சபீர் (29) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல பழைய குற்றவாளிகளான நாகரசம்பட்டி ஈஸ்வரி (37), வீரமலையை சேர்ந்த மனோ (40), தட்டக்கள் பகுதியை சேர்ந்த காவேரி (எ) அண்ணாமலை (57), காட்டுகொல்லையை சேர்ந்த சின்னையன் (60)ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News