உள்ளூர் செய்திகள்

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி உற்சவம்: நாளை மறுநாள் துவங்குகிறது

Published On 2023-11-11 06:57 GMT   |   Update On 2023-11-11 06:57 GMT
  • நிறைவு நாளான 18-ந் தேதி இரவு தென்மாட வீதியில் சூரசம்ஹாரம் நடத்தப்படுகிறது.
  • 19-ந் தேதி மாலை சந்தனக்காப்பும், 20-ந் தேதி பாலாபிஷேகமும் நடைபெறுகிறது.

மாமல்லபுரம்:

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் ஆறுமுக சுவாமி கந்த சஷ்டி உற்சவம் நாளை மறுநாள் துவங்குகிறது. இந்த உற்சவம் வரும் 18-ந் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் வழிபாடுகள் நடைபெறுகிறது. நிறைவு நாளான 18-ந் தேதி இரவு தென்மாட வீதியில் சூரசம்ஹாரம் நடத்தப்படுகிறது.

19-ந் தேதி மாலை சந்தனக்காப்பும், 20-ந் தேதி பாலாபிஷேகமும் நடைபெறுகிறது. இந்து சமய அறநிலையத்துறையினர் கந்த சஷ்டி உற்சவவிழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News