கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த மருத்துவ முகாமை கலெக்டர் சரயு தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகளை பார்வையிட்டார்.
- முகாமை மாவட்ட கலெக்டர் சரயு தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகளை பார்வையிட்டார்.
- கர்ப்பினி பெண்களுக்கு, ஊட்டசத்து பெட்டகம், பார்வை குறைபாடு உள்ள ஆண்களுக்கு மூக்கு கண்ணாடிகள் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இலவச பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட கலெக்டர் சரயு நேற்று தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகளை பார்வையிட்டார்.
இதில், தளி சட்டமன்ற உறுப்பினர் டி.ராமசந்திரன் மற்றும் ஓசூர் சார் ஆட்சியர் சரண்யா, துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு.ரமேஷ்குமார், கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார், தளி வட்டார மருத்துவ அலுவலர் நிர்மலா, தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி, மாவட்ட கவுன்சிலர் பழனிசாமி, அஞ்செட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற செயலாளர்கள் உள்ளிட்ட சுற்றுபுற கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் கர்ப்பினி பெண்களுக்கு, ஊட்டசத்து பெட்டகம், பார்வை குறைபாடு உள்ள ஆண்களுக்கு மூக்கு கண்ணாடிகள் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இந்த மருந்துவ முகாமில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் மூலம் பொது மருத்துவம், மகப்பேரு மருத்துவம், குழந்தைகளுக்கான சிகிச்சை, காது மூக்கு தொண்டை பிரிவு, கண்நோய் சிகிச்சை, பல்நோக்கு பிரிவு மருத்துவம், காசநோய், மன நல மருத்துவம் மற்றும் தொழுநோய் பிரிவுகளின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அஞ்செட்டி சுற்றுபுற கிராம மக்கள் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என கலந்து கொண்டவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.