உள்ளூர் செய்திகள்

குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் -கிருஷ்ணகிரியில் நாளை முதல் தொடக்கம்

Published On 2022-11-27 15:03 IST   |   Update On 2022-11-27 15:03:00 IST
  • இலவச பயிற்சி வகுப்பு நாளை (28-ந் தேதி) காலை 10.30 மணி முதல் இவ்வலுவலகத்தில் தொடங்கப்படவுள்ளது.
  • பாடவாரியாக தேர்வுகள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு தேர்விற்கான தனிநபர் ஆலோசனையும் வழங்கப்படும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவ லர் கவுரிசங்கர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை (28-ந் தேதி) காலை 10.30 மணி முதல் இவ்வலுவலகத்தில் தொடங்கப்படவுள்ளது.இவ்வகுப்பில், முந்தைய தேர்வுகளின் மாதிரி வினாத்தாள்கள் மற்றும் தேர்விற்கான பாடக்குறிப்புகள் வழங்கப்படும். மேலும் வாரம் ஒருமுறை பாடவாரியாக தேர்வுகள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு தேர்விற்கான தனிநபர் ஆலோசனையும் வழங்கப்படும்.

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்ப முள்ளவர்கள் முன்பதிவு செய்துகொள்ளவும். மேலும், தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் தங்களது முகவரிக்கான ஆதாரம் ஆகியவற்றுடன், கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், இது தொடர்பான விபரங்களை 04242-291983 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலைநாட்டிகளில் தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த, இத்தேர்விற்கு தயாராகும் தகுதிவாய்ந்த தேர்வர்கள் இவ்வகுப்புகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News