உள்ளூர் செய்திகள்

அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றபோது எடுத்த படம்.

சேர்வைகாரன்பட்டி ஊராட்சியில் ரேஷன் கடை கட்ட அடிக்கல் நாட்டு விழா

Published On 2023-03-15 14:03 IST   |   Update On 2023-03-15 14:03:00 IST
  • அடிக்கல் நாட்டு விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
  • கட்டிட பணிக்கான அடிக்கல்லை சிவபத்பநாதன் நாட்டினார்.

கடையம்:

கடையம் யூனியனுக்குட்பட்ட சேர்வைகாரன்பட்டி ஊராட்சியில் ரூ.9.13 லட்சத்தில் பகுதி நேர ரேஷன் கடை கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவரும் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினருமான ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவபத்பநாதன் கட்டிட பணிக்கான அடிக்கல்லை நாட்டினார்.

விழாவில் ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன், ஒன்றிய பிரதிநிதி அரிச்சந்திரன், பொருளாளர்துரை, கிளைச் செயலாளர்கள் சமுத்திரபாண்டி,செல்வராஜ், ராஜேந்திரன், பொன்னுத்துரை, கே.செல்வராஜ், ஊராட்சி உறுப்பினர் தங்கராஜ் மற்றும் அருணாசலம், கருப்பசாமி, பாலச்சந்திரன், கணேசன், மாரிச்செல்வம், பாலகுமார், முருகேசன், கணபதி நாடார், பலவேசம் நடராஜன், கண்ணன், கதிர்குமார், மகேஷ், கோபால்,மாரிச்செல்வன், மகேஷ்வரன், நவீன் கிருஷ்ணன், ஆனந்த், ரேவதி, முப்புடாதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News