உள்ளூர் செய்திகள்
தன்னார்வலர்களுக்கு குறு வள மைய அளவிலான பயிற்சி முகாம்
- குறு வள மைய அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்றது.
- இல்லம் தேடி கல்வி திட்டத்தின் தொடக்க நிலை தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழக அரசின் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் சார்பில் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு குறு வள மைய அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்றது.இப்பயிற்சி முகாமில் ஆசிரிய பயிற்றுநர்கள் சாரதி,விமலன், ஆசிரி யைகள் சரண்யா,சுகாசினி ஆகியோர் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு குறைதீர் கற்பித்தல் தொடர்பான பயிற்சி அளித்தனர்.
இப்பயிற்சியில் 1 -ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ,மாணவியர்களுக்கு அடிப்படை எழுத்தறி வித்தல், எழுதுதல்,எண்கள் ஆகியவை எளிதாக புரியும் வண்ணம் வகுப்புகள் நடத்தும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டது.இப்பயிற்சி முகாமில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் தொடக்க நிலை தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.