உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை

Published On 2023-09-17 15:20 IST   |   Update On 2023-09-17 15:20:00 IST
இதில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.

அருவங்காடு,

நீலகிரியில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக அளவில் மண்சரிவு, நிலச்சரிவு ஏற்படுவது வழக்கம். அந்த நேரத்தில் பொதுமக்களை காப்பாற்றுவது குறித்து குன்னூர் தீயணைப்புதுறை சார்பில் அங்கு உள்ள சுற்றுலா தலங்களில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தண்ணீரில் அடித்து செல்லப்படுவோரை எப்படி மீட்பது, எவ்வாறு முதலுதவி அளிப்பது என்பது குறித்து ஊழியர்கள் செயல் விளக்கம் செய்து காட்டினர்.

அப்போது மண் சரிவுகளில் சிக்கியவர்களை மீட்பது, வீடு இடிந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்வது குறித்து தத்ரூப ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News